Free Laptop - இலவச லேப்டாப் பெற விண்ணப்பியுங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன ?

 Free Laptop - இலவச லேப்டாப் பெற விண்ணப்பியுங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன ?


* மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023க்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன*❤

நிதிக் காரணங்களால் சொந்தமாக மடிக்கணினி வாங்கும் நிலையில் இல்லாத மற்றும் அவர்களின் கல்வி நிலையில் லேப்டாப் தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது.

* 2023 ஆம் ஆண்டில் 960,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப் வழங்கப்படும்*

* விண்ணப்பம் தொடங்கப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்*

 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இலவச லேப்டாப் வழங்குவதாகவும் , அதனைப்பெற இந்த லிங்கில் சென்று உங்கள் விபரம் அளிக்கவும்  என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள..அந்த செய்தி பொய்யானது.யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...

அது போல் ஓர் செய்தியை இந்திய அரசும் சரி, நம் தமிழக அரசும் இது போல் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் 

இரண்டாவது எச்சரிக்கை அவசியம்

இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக கவனம் தேவை 

இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது 

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

மேலும் இந்த செய்தி குறித்து மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்திய அரசு இலவச லேப்டாப் கொடுப்பதாக பரவி வரும் மெசேஜ் போலியானது என்றும் இதுபோன்ற எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை எனவும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. 

இலவச லேப்டாப் என்ற மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டும் என்ற அறிவுறுத்தும் வகையில் பிஐபி இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பை படிக்க:-

https://twitter.com/PIBFactCheck/status/1626134936918040578/photo/1


மேலும் நீங்கள் சிந்திக்க 

இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா ?

ரீசார்ஜ் இலவசம்

லேப்டாப் இலவசம்

என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்

எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் 

Post a Comment

0 Comments